‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் |

2025ம் வருடத்தில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியான ஒரு நாளாக நேற்றைய மே 9ம் தேதி அமைந்துள்ளது. நேற்று மட்டும் “அம்பி, என் காதலே, கஜானா, கலியுகம், கீனோ, நிழற்குடை, சவுடு, எமன் கட்டளை, யாமன்,” உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இவற்றில் ஒரு சில படங்களில் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகர்கள், நடிகைகள் நடித்த படங்களாக உள்ளன. 'அம்பி, கஜானா, கலியுகம்' ஆகிய படங்கள்தான் அவை. அவற்றிற்கும் கூட முன்பதிவு என்பது ஒரு வரிசை மட்டுமே நடந்திருக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அவற்றிற்கான தியேட்டர்கள் கிடைத்துள்ளது. மற்ற படங்களுக்கு அதைவிட மோசமாகவே தியேட்டர்கள் கிடைத்துள்ளன.
சிறிய பட்ஜெட் படங்களுக்கான உண்மை நிலை இதுதான். சில படங்களுக்கு அந்த ஒரு வரிசை கூட முன்பதிவு என்பது இல்லை. இப்படியான நிலையை மாற்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று திரையுலகிலேயே சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் கேட்பதில்லை, அவற்றை அமல்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை. இந்நிலை நீடித்தால் சிறிய பட்ஜெட் படங்கள் தயாராவது போகப் போகக் குறைந்துவிடும்.