பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அடுத்த கட்டத்துக்குச் சென்றவர் சூரி. 'விடுதலை 2' மற்றும் 'கருடன்' ஆகிய படங்கள் அவருடைய நாயகன் அந்தஸ்தை இன்னும் கூடுதலாக்கியது.
அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் வரும் மே 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் கதையையும் சூரியே எழுதியுள்ளார். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி சூரி ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி ஓடிடி, சாட்டிலைட் உரிமையிலிருந்தே கிடைத்துவிட்டதாம். 'விலங்கு' வெப் சீரிஸ் மூலம் பிரசாந்த் பாண்டிராஜ் ஜீ குழுமத்துடன் நெருக்கமாக உள்ளதால் அங்கேயே படத்தை விற்றுவிட்டார்களாம். அதன் விலை சுமார் 12 கோடி என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் தனது படங்களின் வியாபாரத்திலும் சூரி முன்னேறியுள்ளார் என்பதை கோலிவுட்டில் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.