சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
முண்டாசுப்பட்டி, ஜெய்பீம், சூரரைப்போற்று உட்பட பல படங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் பிரபல பட நிறுவனமான சூப்பர் குட் நிறுவனத்தில் பணியாற்றியதால் இந்த பெயரில் அழைக்கப்பட்டார்.
பல்வேறு படங்களில் போலீசாக, அப்பாவாக பல குணசித்திர வேடங்களில் நடித்தார். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, புற்றுநோய் பாதிப்பு என தெரிய வந்தது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தனது சிகிச்சைக்கு நிதி தேவை , தனக்கு 4வது கட்ட புற்று நோய் பாதிப்பு என பேட்டி கொடுத்தபோது பல நடிகர்கள், சினிமா கலைஞர்கள் உதவி செய்தனர். புற்று நோய் சிகிச்சை பெற்ற நிலையிலும் கமாண்டோவின் லவ் ஸ்டோரி என்ற படத்துக்கு டப்பிங் பேசினார். பின்னர், வீட்டில் ஓய்வெடுத்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகமாக, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் பாதிப்பு மூளை உட்பட பல இடங்களுக்கு பரவியதால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்
மறைந்த சுப்பிரமணிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சென்னையில் நாளை இறுதி சடங்கு நடக்கிறது.