டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? |
பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் நடித்து வரும் படங்ளில் தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது, கெட்டப் மாற்றுவது என அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதற்காகவே அவரை மிஸ்டர் பர்பெக்ஷனிஸ்ட் என்று கூட குறிப்பிடுவார்கள். அந்த வகையில் ஹிந்தியில் தனது படத்தில் நடிப்பதற்காக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குளிக்காமல் படப்பிடிப்பில் அமீர்கான் கலந்து கொண்டார் என்று ஒரு செய்தி சொல்லப்பட்டு வந்தது. இது உண்மை தான் சமீபத்திய பேட்டியில் அமீர்கான் ஒப்புக்கொண்டார்.
அதாவது 1989ல் ராக் என்கிற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக தெருவில் சுற்றும் மனிதனாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு அழுக்கடைந்த தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 12 நாட்கள் குளிக்காமலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
அது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை அதாவது 1998ல் குலாம் என்கிற படத்தில் நடித்தபோது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒரு வாரத்திற்கு மேல் படமாக்கப்பட்டது. அந்த சண்டைக் காட்சியில் மோதும்போது அடிபட்ட தழும்புகள், காயங்கள் இவை எல்லாம் குளித்தால் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல குளித்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ஒரு பிரஸ் லுக் மீண்டும் வந்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக அந்த சண்டைக்காட்சிகளை படமாக்கிய நாட்களில் கிட்டத்தட்ட ஒரு வாரம் குளிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.