ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தற்போது புதிய படங்கள்கூட தியேட்டரில் வெளியான ஒரு சில வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஓடிடிக்கு வந்து விட்டன. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் 4 வாரங்களில் ஓடிடிக்கு வந்தது.
இதனால் வசூல் பாதிப்பதாக தியேட்டர் அதிபர்கள் கருதுகிறார்கள். படம் தியேட்டரில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக பிரிந்து வலுவிழந்திருப்பதால் இதனை கண்டிப்புடன் செயல்படுத்த முடியவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தயாரிப்பாளர் சங்கம் கேஆர்ஜி, ராம நாராணயன் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. சமீபகாலமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து முக்கியமான ஒரு முடிவெடுக்க வேண்டியது இருக்கிறது. இதுகுறித்து ஒரு கலந்தாய்வு கூட்டத்தை தியேட்டர் அதிபர்கள் சங்கம் நடத்த இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.