நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.
தமிழில் மிகச் சுமாரான வசூலையும், தெலுங்கில் நல்ல வசூலையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறைந்த லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. தமிழிலும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தால் லாபம் அதிகமாக இருந்திருக்கும்.
இப்படம் அடுத்த வாரம் ஜூலை 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் இடம் பெற உள்ளது.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாத சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு. அப்படி இந்த 'குபேரா' படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.