‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
வாரந்தோறும் பிரபல ஓடிடி தளங்களான ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட் பிளிக்ஸ், ஜீ5, ஆஹா, சோனி லைவ், லயன்கேட்ஸ் பிளே உள்ளிட்டவற்றில் பலமொழி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகின்றன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வரிசையில், இந்த வாரம் வெளியாகவுள்ள புதுவரவுகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
நரிவேட்டை (மலையாளம்)
பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலைவாழ் மக்களின் வாழ்வாதார பிரச்னையில் அரசாங்கமும், காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை அழகான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் அனுராஜ் மோகன். மேலும், இயக்குநர் சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படம் இதுவாகும். கடந்த மே 23ம் தேதி திரையரங்கில் வெளிவந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நாளை (ஜூலை 11ம் தேதி) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கலியுகம் (தமிழ்)
பிரபல நடிகை ஷ்ரத்தா மற்றும் கிஷோர் நடிப்பில் உருவாகி மே 9 ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் இது. போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில் பல விதமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வெளிவந்தது. இந்த படத்தில் இனியன், அஸ்மல் ஹரி, மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். புதுமுக இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 11ம் தேதி) வெளியாகிறது.
ஆப் ஜெய்சா கோய் (ஹிந்தி)
நடிகர் மாதவன் நடித்துள்ள ஹிந்தி படம் ‛ஆப் ஜெய்சா கோய்'. நாயகியாக ‛தங்கல்' பட புகழ் பாத்திமா சனா ஷேக் நடித்திருக்கிறார். விவேக் சோனி இயக்கி உள்ளார். மனிதநேயம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி இப்படம் பேசுகிறது. வயது இடைவெளி காதல் தான் படத்தின் ஒரு வரிக்கதை. இந்தப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
Mr and Mrs.Bachelor (மலையாளம்)
மலையாள இயக்குநர் தீபு கருணாகரன் இயக்கத்தில் அனஸ்வர ராஜன் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் நடிப்பில் வெளி வந்த வந்த திரைப்படம் Mr and Mrs bachelor. வசதியான பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு வெளியேறி, அறிமுகமில்லாத இந்திரஜித்தை சந்திகிறாள். அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக படமாக்கியுள்ளார் இயக்குநர். மே 23ம் தேதி திரையங்கில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் நாளை(ஜூலை 11ஆம் தேதி) லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மூன்வாக் (மலையாளம்)
புதுமுக நடிகர்களை வைத்து இயக்குநர் வினோத் ஏ.கே இயக்கி உள்ள திரைப்படம் 'மூன்வாக். பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்கள் சந்திக்கும் போராட்டம் குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மே 30ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை 8ல் வெளியாகியுள்ளது .
8 வசந்தலு (தெலுங்கு)
அனந்திகா சனில்குமார் மற்றும் ரவி டுக்கிர்லா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் '8வசந்தலு'. தெலுங்கு படமான இதை இயக்குநர் பனின்ற நர்செட்டி இயக்கியுள்ளார். காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் நாளை(ஜூலை 11) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Mr. Rani(கன்னடம்)
நடிகராக ஆசைப்படும் ஒருவர் நடிகையாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர் ஏன் நடிகையாக நடிக்கிறார் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தீபக் சுபிரமன்யா மற்றும் பார்வதி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுசந்திரா என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நாளை(ஜூலை 11 ம் தேதி) லயன்கேட்ஸ் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.