தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | 'விஜ்ஜ்ஜஜஜு…….' யார் தெரியுமா ? | மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? |
சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்து 'நரிவேட்டை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.
'இஷ்க்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அனுராஜ் மனோகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது தமிழில் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சேரனின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.