அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தை அறிவித்துவிட்டார்கள். பொதுவாக டாப் நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளிவந்தால் மற்ற நடிகர்கள் போட்டி போட மாட்டார்கள். அவர்களது படங்களைத் தள்ளி வைப்பார்கள்.
ஆனால், 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்க சுதா கோங்கரா இயக்கி வரும் 'பராசக்தி' படமும் வெளியாகும் எனத் தெரிகிறது. 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு நேற்று வந்தவுடன், 'பராசக்தி' படத்தின் தயாரிப்பாளர், “இந்த பொங்கல்” எனக் குறிப்பிட்டு 'பட்டாசு, நெருப்பு' ஆகிய எமோஜிக்களைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'பராசக்தி' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட உள்ளோம் என அவர் மறைமுகமாகத் தெரியப்படுத்தி உள்ளார்.
'பராசக்தி' படத்தின் தயாரிப்பாளர் ஆளும் கட்சியின் உறவினர். அதனால், அப்படத்திற்குத்தான் அதிகமான தியேட்டர்களை அவர்கள் பெற வாய்ப்புண்டு. 'ஜன நாயகன்' படத்தை எப்படியும் ஆளும் கட்சிக்கு எதிரான படமாகத்தான் எடுத்திருப்பார்கள். எனவே, 'பராசக்தி' படத்தை வெளியிடுவதன் மூலம் 'ஜன நாயகன்' படத்திற்கு நெருக்கடி தர வாய்ப்புகள் அதிகம்.
'தி கோட்' படத்தில் விஜய் அவரிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் அடுத்த விஜய் ஆக சிவகார்த்திகேயன் தான் என அது மறைமுகமாக சொல்வது போல இருந்தது என ரசிகர்கள் பேசினார்கள். ஆனால், இப்போது விஜய்யுடனேயே சிவகார்த்திகேயன் மோதும் நிலை வர உள்ளது.