மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சினிமாவில் காதலும், பிரிவும் சர்வ சாதாரணம். ஒரு காதல் பற்றி கேள்விப்பட்டால் அடுத்து ஏதோ ஒரு பிரிவு பற்றியும் செய்திகள் வரும். தற்போது வந்துள்ளது ஒரு காதல் செய்தி.
2020ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த பத்து வருடங்களாக தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கும் தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கும் காதல் என கிசுகிசு பரவி வருகிறது. தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் சகோதரி மகன் தான் வைஷ்ணவ் தேஜ். 'உப்பெனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
ரித்து, வைஷ்ணவ் இருவரும் இணைந்து நடித்ததில்லை என்றாலும் அவர்கள் வெளியில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள். அந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது என்று தகவல்.