கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். காடுகளை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வருகிறது.
முதலில் கும்பா என்ற கேரக்டரில் பிரித்விராஜ் நடிப்பதாக அறிவித்து அவரின் முதல் பார்வையை வெளியிட்டனர். தொடர்ந்து படத்தின் முன்னோட்ட பாடலாக ' குளோப் ட்ராட்டர்'-ஐ வெளியிட்டனர். இதை ஸ்ருதிஹாசன் பாடியிருந்தார். நாளைமறுதினம் நவ., 15ல் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பிரமாண்டமான விழா வைத்து வெளியிடுகின்றனர். இதை ஓடிடியிலும் நேரலையில் ஒளிபரப்ப உள்ளனர்.
இந்நிலையில் நாயகி பிரியங்கா சோப்ராவின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அவர் மந்தாகினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். மலைகளுக்கு நடுவே அதிரடி ஆக் ஷன் காட்சியில் அவர் நடித்திருப்பது போன்று போஸ்ரை வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஊமை ராணியின் பெயர் இது. மேலும் ராமாயணத்தில் சொல்லப்பட்ட ஒரு நதியின் பெயரும் கூட இது.