மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் | ஜப்பானில் வெளியான 'வேட்டையன்' | கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? |
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'தேவரா'. சுமார் 500 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்காக படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு புரமோஷன் பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்கள். நேற்று ரசிகர்களுக்காக பிரிமீயர் காட்சி ஒன்று நடைபெற்றது. ஜப்பான் ரசிகர்கள் ஆர்வமாகப் படம் பார்க்க வந்து அரங்கை நிறைத்துள்ளார்கள்.
அப்போது சில ஜப்பான் ரசிகர்கள் மேடையில் 'தேவரா' பாடலுக்கு நடனமாடினர். அவர்களுடன் இணைந்து ஜுனியர் என்டிஆரும் நடனமாடினார். அதைக் கை தட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர் ரசிகர்கள்.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் ஜப்பான் நாட்டில் நல்ல வசூலைப் பெற்றன. அதுபோல 'தேவரா' படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.