துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

'மஹா சிவராத்திரி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் டூரிங் டாக்கீஸ்கள் இருந்தபோது ஒரே டிக்கெட்டில் விடிய விடிய மூன்று படங்களைக் காட்டுவார்கள். காலப் போக்கில் அவை போய்விட்டன.
தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இன்று இரவு மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்', ஜுனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' ஆகிய படங்களை இரவு நேரக் காட்சியாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்தக் காட்சிகளுக்கு தெலுங்கானா அரசு அனுமதி அளிக்கவில்லை.
கடந்த வருடம் 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது நடைபெற்ற நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதனால், அங்கு அனைத்துவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவே தான் இன்றைய சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இன்றைய சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மகேஷ்பாபு ரசிகர்களும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.