பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த காந்தாரா படத்தின் முன்பகுதி தற்போது 'காந்தாரா சாப்டர் 1' பெயரில் தயாராகி உள்ளது. நாளை மறுநாள் (2ம் தேதி) இந்த படம் வெளியாக உள்ளது. ரிஷப் ரெட்டி இயக்கி, நடித்துள்ளார். கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியாகிறது.
கர்நாடகம், ஆந்திரா, மும்பையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்று புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார்கள்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, நாளை (இன்று)சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த புரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி, மேலும் தமிழகத்தில் உள்ள எங்கள் பார்வையாளர்களை மிகவும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க காத்திருக்கிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.