சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகர் ரஞ்சித் நடிப்பில், வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இறுதி முயற்சி'. அக்டோபர் மாதம் பத்தாம் தேதி படம் ரிலீஸாகிறது. ரஞ்சித் பேசுகையில், ‛‛சென்னையில் சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணித்த போதும் தற்போது பயணிக்கும் போதும் மனம் கனத்து விடும். ஏனெனில் சினிமாவில் என்றைக்காவது சாதித்து விட வேண்டும் என்ற கனவில் தங்களது வாழ்வை தொலைத்து விட்டு அலைபவர்கள் அதிகம்.
நான் எப்போதும் வாய்ப்புகளை தேடி அலைந்ததில்லை. ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தில் (பொன்விலங்கு) நடிக்க தேர்வானேன். இதற்காக அவரை சந்தித்ததில் இருந்து நடிகராக தேர்வாகும் வரை எனக்குள் பெரும் பதற்றம் இருந்தது. அந்த காலகட்டத்தில் எல்லாம் கதைக்குப் பொருத்தமான முகங்களை தான் இயக்குநர்கள் தேர்வு செய்தார்கள்.
அந்தவகையில் ஆர்.கே.செல்வமணியின் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக தேர்வானேன். இதற்கு ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வத்தின் விருப்பமும், சம்மதமும் முதன்மையாக இருந்தது. நான் சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்று தான் வருகை தந்தேன். சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றால் வீடு வாங்கிடலாம், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம் என்று நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. நல்ல சினிமாவிற்காக தான் என்னுடைய கவனம் செல்லும். இதற்காகத்தான் நான் நிறைய சினிமாக்களில் நடிப்பதில்லை. சினிமாவை நேசித்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். சினிமா என்பது ஏனைய தொழிலை போல் அல்ல. இந்தத் தொழிலை சுவாசித்தால் தான் இந்த தொழிலில் இருக்க முடியும்'' என்றார்.