'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

இப்போதெல்லாம் புராண படங்களுக்கு தனி மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் முதல் மிகப்பெரிய பட்ஜெட் வரை புராண படங்கள் தயாராகி வருகிறது. ஏற்கெனவே ராமாயணம், மகாபாரதம், கல்கி, சமீபத்தில் கண்ணப்பா புராண படங்கள் வெளியானது. தற்போது ராமாயணம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராஜமவுலி மகாபாரதத்தை பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதேப்போன்று ஹோம்பாலே பிலிம்ஸ், க்ளீம் புரடக்ஷன் நிறுவனங்கள் பெருமாளின் அவதாரங்களையும் பிரமாண்ட பட்ஜெட்டில் அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கிறது. இதில் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா' வரும் 25ம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய ஆகிய 5 மொழிகளில் 3டியில் வெளியாகிறது. தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மஹாவதார் பரசுராம் (2027), மஹாவதார் ரகுநந்தன் (2030), மஹாவதார் கோகுலானந்தா (2033), மஹாவதார் கல்கி பகுதி 1 (2035), மற்றும் மஹாவதார் கல்கி பகுதி 2 (2037) என வரிசையாக வெளியாக இருக்கிறது.




