சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

1990களில் பிசியான ஹீரோவாக இருந்தவர் சரவணன். சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் 'பருத்தி வீரன்' படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்து அதன் பிறகு 'பருத்தி வீரன்' சரவணன் என்றே அழைக்கப்படுகிறார்.
தற்போது வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் அவர் தற்போது 'சட்டமும் நீதியும்' என்ற வெப் தொடரில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நம்ரிதா நடித்திருக்கிறார். சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார், பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற 18ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது, "சினிமாவில் 35 ஆண்டுகளை கடந்த எனக்கு, இந்த வெப் தொடர் மீண்டும் கதாநாயகன் அரிதாரம் கொடுத்துள்ளது. ரசிகர்களை ஈர்க்கும்படி எனது பயணம் இருக்கும்'' என்றார்.