'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி வித்தியாசமான உணர்வுப்பூர்வமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கியவர். ஒரு கட்டத்தில் தானே நடிகராக மாறி பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்க துவங்கினார். தமிழில் மட்டுமே டைரக்ஷன், நடிப்பு என தனது பயணத்தை தொடர்ந்து வந்த சேரன் முதன் முறையாக நரிவேட்ட என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார். மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தை இஷ்க் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் மலையாளத் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
நடிகர் டொவினோ தாமஸ் கூறும்போது என்னுடைய திரையுலக பயணத்தில் இந்த நரிவேட்ட முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.