பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை சினிமாவாகிறது. அய்யா என்ற தலைப்பில் உருவாகும் அந்த படத்தை சேரன் இயக்குகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி ராமதாஸ் ஆக நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, தமிழ்குமரன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ராமதாஸ் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் சேரன் ஈடுபட்டு இருந்தார். இதற்காக சிலமுறை ராமதாசை சந்தித்து பேசினார். அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், போராட்டங்களை தொகுத்து திரைக்கதையாக மாற்றினார். இந்நிலையில், ராமதாஸ் பிறந்தநாளான இன்று அய்யா படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலில் இந்த படத்தில் ராமதாஸ் ஆக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் முகம், வயது காரணமாகவும், அவரின் அரசியல் பின்புலம் காரணமாகவும் அந்த திட்டம் ரத்தானது. இப்போது ஆரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அய்யா படத்தின் கதையானது ராமதாசின் ஆரம்பகால வாழ்க்கை, அவர் நடத்திய கூட்டங்கள், போராட்டங்கள், அப்போது எதிர்கொண்ட சவால்களை மட்டுமே விவரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 1980, 90 களுக்கு இடையேயான அவரின் பயணத்தை சொல்கிறது. அதனால், ஆரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுவரை சேரன் பல படங்களை இயக்கி இருந்தாலும், அவர் இயக்கும் முதல் வாழ்க்கை வரலாறு படம் இதுவாகும்.