பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் இன்று(ஜூலை 25) வெளியாகியுள்ள படம் 'தலைவன் தலைவி'. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு சுமார் 1000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆனால், படத்தின் தெலுங்குப் பதிப்பான 'சார் மேடம்' படம் இன்று வெளியாகவில்லை. அதன் ஆன்லைன் முன்பதிவு கூட திறக்கப்படவில்லை. படம் இன்று வெளியாகிறதா இல்லையா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பவன் கல்யாண் நடித்து நேற்று வெளியான 'ஹரிஹர வீரமல்லு' படத்துடன் இப்படத்தை போட்டியாக வெளியிடுவதை படக்குழு கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவருக்குமே தெலுங்கில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் பட வெளியீடு குறித்து எதுவுமே சொல்லாமல் விட்டுள்ளது ஆச்சரியம்தான். அடுத்த வாரம் வெளியாகுமா இல்லை இன்னும் தள்ளிப் போகுமா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.