2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இப்போது பழைய படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் சீசன் நடக்கிறது. சமீபத்தில் விஜயின் ‛சச்சின், குஷி', விஜயகாந்த்தின் ‛கேப்டன் பிரபாகரன்' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆன நிலையில், சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படமும் டிஜிட்டலில் புத்தம்புது பொலிவுடன் வரும் 14ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. 2004ம் ஆண்டு வெளியான இந்த படம் 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஆட்டோகிராப் படத்தின் கதையும், பாடல்களும், சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டன. குறிப்பாக, பரத்வாஜின் ஒவ்வொரு பூக்களும், ஞாபகம் வருதே பாடலும், படத்தின் திரைக்கதையும் வெகுவாக மக்களிடம் போய் சேர்ந்தன. சிறந்த படம், சிறந்த பின்னணி பாடகி(சித்ரா), சிறந்த பாடலாசிரியர்( பா.விஜய்) என 3 தேசியவிருதுகளை ஆட்டோகிராப் பெற்றது. பல தனியார் விருதுகளையும் அள்ளியது. இன்றும் ஆட்டோகிராப் சீன்களும், கதையும் பேசப்படும் நிலையில், படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் சேரன். இந்த படத்தை தவிர, கமலின் ‛நாயகன்' படமும் நவம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.