பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
இயக்குனர் ஷங்கர் டைரக்சனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் கேம் சேஞ்ஜர் படம் வெளியானது. ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ளது. அதேசமயம் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. இந்தியன் 2 பட தோல்வியை கேம் சேஞ்ஜர் மூலம் சரி செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த ஷங்கருக்கு இந்த ரிசல்ட் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமீபத்தில் இதை வெளிப்படையாகவே பேசிய ஷங்கர், “கேம் சேஞ்சர் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் குறைந்திருப்பது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஓடும் விதமாக இருந்தது. அதனால் பல காட்சிகளை வெட்டி தூக்கி விட்டோம். ஒருவேளை ரசிகர்களுக்கு பிடித்தமான காட்சிகளை தூக்கி விட்டு பிடிக்காத காட்சிகளை வைத்து விட்டோமோ எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரைப் பொறுத்தவரை ஒரு படத்தை எடுப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார். படப்பிடிப்பையும் அதிக நாட்கள் நடத்துவார். இந்தியன் 2 படத்திற்காக அப்படி அதிக காட்சிகள் எடுத்ததால் தான் மீதம் இருக்கும் காட்சிகளுக்காக புதிய கதையை தயார் செய்து இந்தியன் 3 வரப்போகிறது என்று அறிவித்தார் என்று கூட சொல்லப்படுகிறது. அதிக காட்சிகள் எடுப்பது கூட பரவாயில்லை. ஆனால் பிடித்த காட்சிகளை வெட்டி விட்டு, பிடிக்காத காட்சிகளை வைத்து விட்டோமோ என்று குழப்பத்தில் சொல்வது ஷங்கர் போன்ற ஒரு இயக்குனருக்கு அழகல்ல.. அவர் தானே முடிவு எடுக்கும் உரிமை கொண்டவர்.. ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என அவருக்கு தெரியாமல் போனதை பார்க்கும்போது ஒருவேளை அவர் தன்னை அப்டேட் பண்ணிக் கொள்ளவில்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது என்பது போல பலர் ஷங்கரின் இந்த பதிலை விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படமும் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. அவரது முந்தைய சில படங்களைப் போல கடுமையான விமர்சனங்களை பெறாமல் படம் நன்றாக இருக்கிறது, இந்த சூழலுக்கு தேவையான கருத்து இருக்கிறது. பெரிய அளவில் குறைகள் சொல்ல முடியவில்லை என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம் சமீபத்தில் பாலா அளித்த ஒரு பேட்டியில் அவரிடம், “நீங்கள் படபிடிப்பு நடத்த நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். அதிக அளவில் காட்சிகளை எடுத்து, பினர் தேவையில்லை என நீக்கிவிடுகிறீர்களா” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய இயக்குனர் பாலா, “நான் எப்போதுமே தேவைக்கு அதிகமான காட்சிகளை எடுக்க மாட்டேன். இதுதான் எனக்கு வேண்டும் என முன்கூட்டியே தீர்மானித்து விடுவேன். அந்த காட்சியை சிறப்பாக எடுப்பதற்கு கால நேரம் தாமதம் ஆகுமே தவிர தேவையில்லாமல் காட்சிகளை எடுக்கவே மாட்டேன். அப்படியே மொத்த பட காட்சிகளில் நான் எக்ஸ்ட்ராவாக எடுத்ததை தேவையில்லை என ஒதுக்கினால் அவை வெறும் இருபது நிமிடத்திற்கு உள்ளே தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
பாலாவின் படப்பிடிப்பு தாமதமானாலும் கூட அவர் இப்படி தேவையில்லாமல் காட்சிகளை எடுத்துவிட்டு பின்னர் நீக்குவதில்லை என்று கூறியது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.