போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜன., 10ல் வெளியீட்டிற்கு தயாராகி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா தயாரித்து, நடித்து வந்து பின்பு இப்படத்தில் இருந்து வெளியேறியது அனைவரும் அறிந்தது.
தற்போது நேர்காணலில் இது குறித்து பாலா பேசியதாவது "வணங்கான் படத்திலிருந்து சூர்யாவாக விலகவில்லை. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தளங்களில் சூர்யாவை வைத்து நேரடியாக படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அங்கு அவரை காண ரசிகர்கள் கூடினார்கள். இதனால் திட்டமிட்டவாறு பல நேரங்களில் எங்களால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அதன் பின்னர் நானும், சூர்யாவும் ஆலோசித்து தான் அந்த முடிவை எடுத்தோம். எங்களுக்குள் இன்னும் நல்ல உறவு தான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.