அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
இங்கே ரஜினி, கமல் போல தெலுங்கு திரையுலகிலும் இன்னும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்கிற சீனியர்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பு, ஆக்ஷ்ன், டான்ஸ், வசனம் என எல்லாவற்றிலும் யார் என்ன நினைத்தால் என்ன என நினைக்காமல் தன்னுடைய ஸ்டைலில் படத்திற்கு படம் பட்டையை கிளப்பி வருகிறார். சொல்லப்போனால் ஒரு பக்கம் ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும் கூட அவரது செயல்களை ரசிக்கவே செய்கிறார்கள். இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் டாக்கு மகாராஜ் என்கிற படம் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார். தமிழில் லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு டபிடி டிபிடி என்கிற ஒரு பாடலில் அதிரடி நடனமாடி இருக்கிறார் ஊர்வசி. இந்த காட்சியில் பல கவர்ச்சிகரமான நடன அசைவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் ரசிகர்கள் பலர் இந்த நடன காட்சியை குறிப்பிட்டு பாலகிருஷ்ணாவுக்கு ஊர்வசிக்குமான 30 வருட வயது இடைவெளி இருக்கும்போது இப்படி ஒரு நடனம் தேவையா என்பது போல விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா ரசிகர்களின் விமர்சனத்துக்கு அளித்துள்ள பதிலில், “நான் கலையை கலையாக மட்டுமே பார்க்கிறேன். பாலகிருஷ்ணா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அப்படிப்பட்டவருடன் இந்த கலையில் இணைந்து பயணித்ததை ஒரு நல்ல அனுபவமாக தான் நினைக்கிறேன். அது வெறும் நடனம் மட்டும் அல்ல. கலையை, கடின உழைப்பை, அதன் மரியாதையை கொண்டாடுவது போலத்தான், கலையை கலையாக பாருங்கள்” என்று கூறியுள்ளார்.