விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 650 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று பொங்கலையொட்டி இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றாலும், வேறு சில புதிய முகங்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, என பல படங்களில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது ஆர்யன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.




