தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜுடன் டேட்டிங் செய்யும் ரிது வர்மா! | கேலி, கிண்டலுக்கு ஆளான எனது பெரிய உதடுகளே அடையாளமாகிவிட்டது! -சொல்கிறார் பூமிகா | காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை கொடுத்த என்னை சூர்யா நம்பவில்லை!- இயக்குனர் கவுதம் மேனன் | அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது! | 100 கோடி நஷ்டத்தை கொடுத்த ஷங்கரின் கேம் சேஞ்ஜர்! | தியேட்டர் ரன்னிங் டைமோடு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான விடுதலை-2! | திருப்பதியில் 'மொட்டை' போட்ட தயாரிப்பாளர் தில் ராஜு | கிங்ஸ்டன் படப்பிடிப்பு நிறைவு | ‛வணங்கான்' படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்: பாலா ஆவேசம் | “இனிமேலாவது என் பெயரை மாற்றுங்கள்”: சுந்தர்.சியிடம் அஞ்சலி வேண்டுகோள் |
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‛வணங்கான்'. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவான 'வணங்கான்' படத்திற்கு பெண்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் நடிகர் அருண்விஜய் கூறுகையில், ‛‛என்னுடைய திரையுலக பயணத்தில் 'வணங்கான்' ஒரு மைல் கல் படமாக அமைந்ததற்கு பாலாவுக்கு நன்றி. ஒரு படம் முழுக்க பேசாமல் நடிக்கும் ஒரு கதாநாயகனாக மக்களை சென்றடைய முடியும் என என் மீதே எனக்கு நம்பிக்கை வர செய்தவர் இயக்குநர் பாலா. அந்த அளவிற்கு எனக்குள் இருந்து நிறைய உழைப்பை பாலா வாங்கி இருக்கிறார். சைகை மொழியை கற்றுக் கொண்டதாக இருக்கட்டும், உடல் மொழியை மாற்றிக் கொண்டதாக இருக்கட்டும், அந்த கதாபாத்திரத்திற்குள் அவ்வளவு ஆழமாக என்னை கொண்டு போனதாக இருக்கட்டும்.. பாலாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் அதை செய்திருக்கவே முடியாது. அந்த வகையில் இந்த படத்தின் உருவாக்கமே எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
என் கதாபாத்திரம் இப்படிப்பட்ட தோற்றத்துடன் தான் இருக்க வேண்டும் என பாலா மனதிற்குள் உருவகப்படுத்தி வைத்திருந்தார். எனக்கும் இதுவரை நான் செய்த படங்களிலேயே மாறுபட்டு பண்ணிய கதாபாத்திரம் என்பதால் தான் பல விஷயங்களை இந்த படத்தில் கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தை புரிந்து கொள்வது எப்படி என்கிற விஷயத்தை இதில் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் இது போன்று மீண்டும் ஒரு படம் பண்ண முடியுமா என தெரியவில்லை. பொங்கல் பண்டிகை ரிலீஸாக இந்த படம் வர வேண்டும் என, தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்று ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் பாலா கூறுகையில், ‛‛என்னுடைய படங்களின் கிளைமாக்ஸ்களில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் பாலுமகேந்திராவிடம் இல்லையே.. உங்களிடம் மட்டும் எப்படி என நீங்கள் கேட்கிறீர்கள், இது கற்றுக்கொண்டு வருவதில்லை.. அது ரத்தத்திலேயே இருக்கிறது. நான் சொல்வது தவறான பதிலாக கூட இருக்கலாம்.. படத்தின் துவக்கத்தில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலை, ஒரு கையில் விநாயகர் சிலையுடன் தோன்றுவதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு குறியீடு தான். பல வருடங்களாகவே கன்னியாகுமரியை களமாக கொண்டு படங்கள் எடுக்கப்படவே இல்லை. மற்ற எல்லா ஊர்களையும் படங்களில் கொண்டு வந்து விட்டார்கள். இது மட்டும் பாக்கி இருக்கிறதே என்பதற்காக கன்னியாகுமரியை எடுத்துக் கொண்டேன்.
பாலியல் கொடுமைகளுக்கு இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட இன்னும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. பேசிப்பேசி தான் எல்லா விஷயத்தையும் புரிய வைக்க வேண்டும் என்கிற இந்த காலகட்டத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி தான் அருண்விஜயின் வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரம். சூர்யா நடித்திருந்தால் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி இப்போது தேவையில்லை. ஏனென்றால் அருண்விஜய் நடித்து, இதோ இப்போது இந்த படத்தை நீங்களே ஹிட் பண்ணியும் கொடுத்து விட்டீர்கள்'' என்றார்.
விஷாலின் நிலைக்கு நான் காரணமா
தொடர்ந்து அவரிடம் நடிகர் விஷாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து கேட்டதற்கு, ‛‛விஷாலுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு 'அவன் இவன்' படத்தில் நான் அவரது கண் பார்வை குறைபாடான கதாபாத்திரத்தை கொடுத்தது தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். இன்னும் சிலர் நான் அவரது கண்ணை தைத்து விட்டதாக வேறு கூறினார்கள். இதில் நான் என்ன செய்வது ? அவரவர்களுக்கு தோன்றியதை பேசுகிறார்கள். அதை கண்டுகொள்ள தேவையில்லை.'' என்று கூறினார்.