5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் |

திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், சமீபத்தில் அவர் கதையின் நாயகியாக நடித்த 'ரிவால்வர் ரீட்டா' என்ற படமும் திரைக்கு வந்தது. இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாத நிலையில் அடுத்து கீர்த்தி சுரேஷின் கவனம் படம் இயக்குவதில் திரும்பியிருக்கிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எதிர்காலத்தில் திரைப்படம் இயக்குவது சம்பந்தமாக பல கதைகளை ஆலோசித்து வருகிறேன். என்னிடம் உள்ள கதைகளை ஸ்கிரிப்ட்டாக வடிவமைத்து விரைவில் அந்த படங்களை தான் இயக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதனால் அடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே படம் இயக்குவதிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்துவார் என்பது தெரியவந்துள்ளது.




