திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதில் அருண் விஜய், ரோஷினி வெங்கடேஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பாலா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'வணங்கான்' என்றால் எதற்கும் வணங்காதவன், அடிபணியாதவன் என்று பொருள். படத்தின் நாயகனும் அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவன். அவன் மனது வைத்தால் தவிர அவனிடமிருந்து யாராலும் எதையும் பெற முடியாது. ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு தான் வணங்கான். அவரின் அனுமதி பெற்று இந்த தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன்.
எந்த கதையையும் நான் தீர்மானம் பண்ணுறதில்லை. இந்தச் சமூகம் எனக்கு ஒரு கதையை தருகிறது. 'இதைக் கண்டும் காணாமல் விட்டுவிடாதே, திரையில் கொண்டு வா' என்று என் முதுகை பிடித்து தள்ளுகிறது. வணங்கானில் முக்கியமான ஒரு சம்பவம் வருகிறது. அது உண்மைச் சம்பவம். அதை நான் எடுத்திருக்கேன். 'இந்த உண்மைச் சம்பவத்தைத் திரையில் கொண்டு வராவிட்டால் நீ சமூகத்தில் வாழ்ந்தே பலன் இல்லை'ன்னு எனது உள் மனசு ராத்திரியெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. அதனால்தான் அந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




