பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் |

கடந்த 2015ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் 'ஆம்பள'. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதுவரை ஹிப்ஹாப் தமிழா என்கிற பெயரில் ஆல்பம் பாடல்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடல்களை பாடினார் ஆதி. தற்போது இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார்.
தற்போது தான் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாக 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் விஷால் மற்றும் சுந்தர்.சி உடன் அவர் எடுத்துக் கொண்ட போட்டோவை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, ‛‛10 வருடங்களுக்கு முன்பு இது நடந்தது #ஆம்பள'' என குறிப்பிட்டுள்ளார்.