''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
வருகிற 2064ம் ஆண்டு சென்னை, ஐதராபாத், பெங்களூரு மாதிரியான பெரு நகரங்கள் அழிந்து மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் அலையும் சூழ்நிலை வந்தால் அப்போது மக்கள் எந்த மாதிரியான மனநிலையுடன் இருப்பார்கள் என்பதை கதை களமாக கொண்டு உருவாகி உள்ள படம் கலியுகம். பிரமோத் சுந்தர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிஷோர், இனியன் சுப்பிரமணி, ஹரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வின்சன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறும்போது “ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பது உணவும் - தண்ணீரும்தான். இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மனிதனிடத்தில் மனித நேயம் என்பது இருக்குமா? என்கிற கற்பனை ஓட்டத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உணவுக்காகவும் - தண்ணீருக்காகவும் போராடும் போராட்டமே இந்த படம். விவசாய பாதுகாப்பு, தண்ணீர் சிக்னம் இல்லாவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் சொல்லும்” என்கிறார்.