மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தருண். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னர் ஹீரோவாக நடித்தார். தமிழில் 'காதல் சுகமானது', 'புன்னகை தேசம்', 'எனக்கு 20 உனக்கு 18' படங்களில் நடித்தார். தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த தருண் இப்போது வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதோடு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருகிறார். இந்த தகவலை தருணின் தாயாரும், நடிகையுமா ரோஜா ரமணி வெளியிட்டிருக்கிறார்.