நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
சுரேஷ் குணசேகரன் தயாரித்து, இயக்கி இருக்கும் படம் 'எறும்பு'. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது: வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குனரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு.
இந்த படத்தில் நான் கந்துவட்டிகாரனாக நடித்திருக்கிறேன். அப்படி நடித்தபோது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் நினைவு வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய விஷயம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது.
தயவு செய்து வட்டிக்கு வாங்கி வாழாதீர்கள். அப்படி வாங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதை திருப்பி கொடுக்கும் சக்தியை ஆண்டவன் உங்களுக்கு தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். காரணம் அது அவ்வளவு கொடுமையான வாழ்க்கை. அந்த வகையில் 'எறும்பு' நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்றார்.