‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நவீன். தற்போது அவர் 'காட்டேஜ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஆர்யா செல்வராஜ் நடிக்கிறார். இவர்களுடன் கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்குகிறார்கள். செந்தமிழ் இசை அமைக்கிறார், சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் கீதா குமார் கூறியதாவது: ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். முழுக்க முழுக்க ஊட்டி பின்னணியில், நடக்கும் கதை. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளோம். என்றார்.