இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
ஆர்.ஆர். கிரியேட்டிவ் சார்பில் என்.சந்திரமோகன் ரெட்டி தயாரிக்கும் படம் என்னை மாற்றும் காதலே. புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் ஜோடியுடன் அலி, துளசி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஜார்ஜ் மரியன், லொள்ளுசபா சாமிநாதன், டேனியல் வாசுதேவன், கிருஷ்ணவேணி, நாராயணராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரதன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பி.ஜலபதி இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக பட்டணம் வருகிறான் நாயகன். அங்கு நாயகியை பார்க்கிறான். அவளை விடாமல் துரத்தி காதலை வெளிப்படுத்த துடிக்கிறான். அவளோ தனக்கு நிறைய லட்சியங்கள் இருப்பதாக கூறி அவன் காதலை நிராகரிக்கிறாள்.
இதனால் நாயகன் எடுக்கும் முடிவினால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறாள் நாயகி. அந்த முடிவு என்ன? அதனால் நடந்தது என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல , காதலிக்க நினைப்பவர்களுக்கும், காதலிக்காமல் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம்பிடிக்கும். என்கிறார் இயக்குனர்.