ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் 'பரியேறும் பெருமாள்'. அப்படத்தை ஏழு வருடங்களுக்குப் பிறகு ஹிந்தியில் ரீமேக் செய்து 'தடக் 2' என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டனர்.
ஷாஸியா இக்பால் இயக்கத்தில், சித்தாந்த் சதுர்வேதி, டிரிப்டி திம்ரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். இந்தப் படம் முடிந்து கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டியது. வெளியீடு அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளி வைக்கப்பட்டது. சென்சார் பிரச்சனை வேறு படத்தைத் தாமதப்படுத்தியது. அனைத்தையும் தீர்த்து ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிட்டார்கள்.
ஆனால், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதுவரையில் 15 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாம். கடந்த மாதம் வெளிவந்த 'சாயாரா' படத்தின் வெற்றிப் புயலில் 'தடக் 2' படமும் சிக்கிக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'சன் ஆப் சர்தார் 2' படமும் 40 கோடி வசூலையே நெருங்கியுள்ளது.