ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

பத்மினி முன்னணி நடிகை ஆவதற்கு முன் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்தார். 'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் ஆடி வந்தனர். சில காலத்திற்கு பிறகு ராகினி மலையாளத்தில் பிசியான நடிகை ஆகிவிட்டதால், பத்மினியும், லலிதாவும் ஆடி வந்தனர்.
இவர்கள் இருவரும் 'தர்ம தேவதா' என்ற படத்தில் 5 பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். காரணம் இந்த படத்தில் அவர்கள் தெருவில் நடனமாடி பிழைக்கும் நடன கலைஞர்களாக படத்தில் நடிக்கவும் செய்தனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரானது. தமிழில் தோல்வி அடைந்தது, தெலுங்கில் வெற்றி பெற்றது. சாந்தகுமார் நாயகியாக நடித்தார், அவரது கணவர் புல்லையா படத்தை தயாரித்து, இயக்கினார்.
சச்சு, கிரிஜா, சி.வி.வி. பந்துலு, கே.துரைசாமி, லிங்கமூர்த்தி, முக்கம்மாளா, பி.என்.ஆர், கவுசிக், ரேலங்கி, லட்சுமிபிரபா, கே.எஸ். அங்கமுத்து, கணபதி பட் மற்றும் 'மாஸ்டர்' மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.




