ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் | ராம்சரண் படத்தால் இயக்குனர் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வரப்போகிறது : ராஜமவுலி ஆருடம் | ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்பட்ட சில காட்சிகள் ராஜா சாப் படத்தில் சேர்ப்பு | காசிக்கு போனேன் கரு கிடைத்தது : மோகன் ஜி |

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். அந்த தெலுங்கு படத்தின் தலைப்பு 'குர்ரம் பாப்பி ரெட்டி'. முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல தெலுங்கு காமெடியன் பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அந்தவகையில், பிரம்மானந்தம் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்துள்ளார், இருவரும் மனம் திறந்து பேசினர்.
அப்போது, தனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள அவர், "நான் பிரம்மானந்தம்" என்ற புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார். இந்த அனுபவத்தைப் பற்றி யோகி பாபு, தெலுங்கு சினிமா என்னை இப்படிப்பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரம்மானந்தம் சார் போல ஒரு லெஜண்டுடன் இணைவது பெருமையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.