ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன் சார்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புதுமுகம் சுரேஷ் ரவியுடன் யோகி பாபுவும் இணை நாயகனாக நடிக்கிறார். தீபா பாலு, பிரிகிடா சாகா,  தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
கே.பாலய்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்து பின்னணியில், கலக்கலான பேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. 
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக  உருவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி  முடிக்கப்பட்டுள்ளது. என்றார்.