மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா |

'ரோமாஞ்சம்' மற்றும் 'தளவரா' உள்ளிட்ட மலையாள படங்கள் மூலம் கவனம் பெற்றவர் அர்ஜூன் அசோகன். 'ப்ரோ கோட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த படமான "சத்தா பச்சா" படமும் தமிழில் வெளியாகிறது. இதற்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரோஷன் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விசாக் நாயர் மற்றும் இஷான் ஷவுகத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஷிஹான் ஷவுகத் மற்றும் ரிதேஷ் எஸ் ராமகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கிறார்கள், அத்வைத் நாயர் இயக்குகிறார். அனேந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார் சங்கர் - ஏஹ்சான் - லாய் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்கள். முஜீப் மஜீத் பின்னணி இசை அமைக்கிறார்.
'த ரிங் ஆப் ரவுடீஸ்' என்ற டேக்லைனுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. கொச்சி துறைமுகத்தில் செயல்பட்டு வந்த ஒரு பைட் கிளப்பை மையமாக வைத்து காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.