பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் | முதல் வருட நிறைவு தினத்தில் 'தேவரா' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 50 வயதில் விஜய் பட ஹீரோயினின் திருமண ஆசை | பிகினி உடை சர்ச்சை ; சாய்பல்லவி வெளியிட்ட விளக்க வீடியோ |
மோகித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜுலை 18ம் தேதி வெளியான ஹிந்தித் திரைப்படம் 'சாயாரா'. இப்படம் தற்போது உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்த வசூலாக 376 கோடி, (நிகர வசூல் 308 கோடி), வெளிநாடுகளில் மொத்த வசூலாக 131 கோடி என மொத்தம் 507 கோடியை வசூலித்துள்ளது. இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு காதல் திரைப்படம் இந்த அளவிற்கு வசூலித்துள்ளது இதுவே முதல் முறை.
2025ல் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 'சாவா' ஹிந்திப் படம் சுமார் 800 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 507 கோடியுடன் 'சாயாரா' இரண்டாவது இடத்தில் உள்ளது.
500 கோடி வசூலைக் கடந்த இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூலைக் கடந்த படங்களில் தற்போது 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் பத்து மடங்கு அதிக வசூலைக் கொடுத்துள்ளது.