ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
2022ம் ஆண்டில் ஏஆர் ரஹ்மான் இசையில் இதுவரையில் “இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக ரஹ்மான் இசையமைத்த எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஒரே ஆண்டில் ரஹ்மான் இசையில் 4 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் பாடல்கள், பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் படங்களின் வெற்றிக்கு ரகுமானின் இசையும் ஒரு காரணம் என்பதை ரசிகர்களும் சொன்னார்கள். அந்த இரண்டு படங்களிலும் பின்னணி இசையும் பெரிதாகப் பேசப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக பாடல்களை வெளியிடுவது போல பின்னணி இசையையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் 'வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் பின்னணி இசையையும், ஏஆர் ரகுமான் தயாரித்த '99 சாங்ஸ்' படத்தின் பின்னணி இசையையும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாக ரகுமான் டுவிட்டரில் அறிவித்துள்ளார். அது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.