ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள புதிய படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா, நாயகியாக நடித்துள்ளார் இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது: இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ஈர்க்கும். 'லவ் டுடே' என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார்.
படத்தின் நாயகியான இவானா, பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தில் ஜோதிகா தான் ஹீரோயின் என்றாலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது இந்த படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தொடர்ந்து ஹீரோயினாக தன்னை தக்க வைத்துக் கொள்வாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும். படம் நவம்பர் 4ம் தேதி வெளிவருகிறது.