கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டக் காக்கா கொண்டக்காரியில் தொடங்கி பல படங்களில் பல பாடல்களை பாடியவர் சைந்தவி. ஜி.வி.பிரகாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பாடுவதை குறைத்துக் கொண்ட சைந்தவி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை சென்னையில் தொடங்கி உள்ளார். இதற்கு சவுண்ட்ஸ் ரைட் என்று பெயரிட்டுள்ளார்.
இதன் திறப்பு விழா நடந்தது. தயாரிப்பாளர் எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ஸ்டூடியோ குறித்து சைந்தவி கூறியதாவது: இந்த ரெகார்டிங் ஸ்டுடியோவைத் துவக்க வேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் கொரோனா குறுக்கே வந்துவிட்டது. இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. என்கிறார் சைந்தவி.