‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

பாலா இயக்கிய ‛நாச்சியார்' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை இவானா. மலையாள நடிகையான இவர், அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த ‛லவ் டுடே' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‛கள்வன்' படத்தில் நடித்தார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை சந்தித்துள்ளீர்களா? என்று இவானாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் : ‛‛அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை சினிமா வட்டாரங்களில் அதிகமாக இருப்பதாக பலர் கூறியிருக்கிறார்கள். என்றாலும் நான் இதுவரை அதுபோன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. முக்கியமாக நான் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்போது எப்போதுமே எனது அம்மா கூடவே வருவார். அதுபோன்று எனது உறவினர் ஒருவரும் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறார். இப்படி நான் பாதுகாப்போடு செல்வதினால்தானோ என்னவோ இதுவரை யாரும் என்னிடத்தில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்கவில்லை என்று நினைக்கிறேன்'' என்கிறார்.