Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகளவில் ரூ.200 கோடி ; அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் வசூலைக் கடந்த 'பொன்னியின் செல்வன்'

03 அக், 2022 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-:-blok-buster-collection-in-3-days

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.

இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ஒரு நாள் முன்னதாக ப்ரீமியர் காட்சிகளும் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 4 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடியே 40 லட்சம் ரூபாய்.



அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலை பெறப் போகும் படம் என்ற சாதனையும் இப்படம் நிகழ்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் மட்டுமல்லாது ஒரு சில வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் முந்தைய சில தமிழ்ப் படங்களின் வசூலை மிஞ்சி வருகிறதாம்.

உலக அளவில் கடந்த மூன்று நாட்களின் வசூல் 200 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 500 கோடியைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
'பொன்னியின் செல்வன்' : இளம் நந்தினியாக ஆச்சரியப்பட வைத்த சாரா'பொன்னியின் செல்வன்' : இளம் ... கமலுடன் இங்கிலாந்து எம்.பி.சந்திப்பு: சினிமா எதிர்காலம் குறித்து ஆலோசனை கமலுடன் இங்கிலாந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

04 அக், 2022 - 07:27 Report Abuse
kulandai kannan சமீப காலமாக மிகத் தீவிரமாக இந்து அடையாளங்களைத் தவிர்த்தே தமிழ் படங்கள் எடுக்கப்பட்டு மூளைச் சலவை வேலைகள், மிஷநரிகளின் உதவியோடு, நடைபெற்று வந்த வேளையில், பொன்னியின் செல்வன் மூலம் இந்து உணர்வுகள் ஆர்பரித்து, உயிர்த்தெழுவதைப் பார்க்கும்போது சில சில்வண்டுகளுக்கு வயிற்றெரிச்சல் வருவது இயற்கைதான்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 அக், 2022 - 06:34 Report Abuse
Mani . V வரலாற்றை திரித்து, பல பொய்களை புகுத்தி, பல உண்மைகளை மறைத்து இவர்கள் செய்யும் அயோக்கித்தனத்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பது வேதனையானது. வரி கட்டும்பொழுது மணிரத்தினம், சுகாசினி இருவரும் நஷ்டம் என்று கணக்கு காட்டுவார்கள்.
Rate this:
SANKAR - ,
04 அக், 2022 - 07:10Report Abuse
SANKARWhat is your opinion about SOORARAI POTRU and JAIBHIM?!...
Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
03 அக், 2022 - 22:49 Report Abuse
sankaseshan உலக அளவில் இல்லை பிரபஞ்ச அளவில் வெற்றி என்று சொல்லி கூத்தாடுங்கள்
Rate this:
chandrasekaran - Tambaram,இந்தியா
03 அக், 2022 - 20:46 Report Abuse
chandrasekaran குற்றம் குறைகளை மறந்து எதிர்காலத்தில் நல்ல தமிழ் வரலாற்று படங்கள் வர இந்த படம் ஒரு காரணமாக அமையும். புது வெள்ளத்தில்
Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
03 அக், 2022 - 20:24 Report Abuse
M.COM.N.K.K. மக்கள் திலகம் நடிகர் திலகம் காலத்தில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் அதுதான் என்போன்ற ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் அவர்கள் இல்லாத பொன்னியின் செல்வனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்காக இப்போது உள்ள நடிகர்களை நாங்கள் குறைசொல்லவில்லை .திலகங்கள் இரண்டும் சேர்ந்து நடித்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்னசெய்வது என்போன்ற ரசிகர்கள் கொடுத்து வைத்தது அவளவுதான்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in