'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இங்கிலாந்து நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர் லார்ட் வேவர்லி நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்து பேசினார். உலகளாவிய கலாச்சாரத்தை உலகெங்கும் பறை சாற்றுவதிலும் சகவாழ்வினை மேம்படுத்துவதிலும் சினிமாவின் பங்கினைக் குறித்து இருவரும் விவாதித்தனர்.
சமீபகாலமாக ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்தும், அரசியல், இலக்கியம், சினிமாவில் முதலீடு, தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது
“கமல்ஹாசன் இந்தியா மற்றும் தமிழ்நாடு குறித்து ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு, உலகில் அவர்களின் நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர்" என்று லார்ட் வேவர்லி கூறியிருக்கிறார். “நம்முடைய மக்கள் மற்றும் மக்களின் வளர்ச்சியைப் பற்றிய அறிவை உலகத் தலைவர்களுடன் விவாதிப்பதிலும் , அவர்களுடன் பரிமாறிக் கொள்வதிலும் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. லார்ட் வேவர்லீ என்னை சந்தித்ததற்கு நன்றி, விரைவில் மீண்டும் சந்திப்போம்”.என்று கமல் கூறினார்.