சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்த படம் 'தெய்வத் திருமகள்'. அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பேபி சாரா. அதன் பிறகு 'சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லுகருப்பட்டி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாரா. டீன் ஏஜ் வயதில் உள்ள சாரா படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய தோற்றமும், அழகும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அவரைப் பார்த்த திரையுலகினர் விரைவில் தங்களது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க அவரை சீக்கிரமே அணுக வாய்ப்புள்ளது.
குழந்தை நட்சத்திரங்களாக தமிழில் பிரபலமாகி பின்னர் கதாநாயகியாகவும் தனி முத்திரை பதித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் உள்ளனர். குறிப்பாக ஸ்ரீதேவி, மீனா ஆகியோரைச் சொல்லலாம். அவர்களது வழியில் சாராவும் இடம் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.