Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கோச்சடையான்' பாணியில் 'ஆதி புருஷ்' டீசர்

03 அக், 2022 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Adipurush-Teaser-out-:-Movie-made-like-Kochadaiyaan

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதி புருஷ்'. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. படத்தை மோஷன் கேப்சரிங் முறையிலும் உருவாக்கியுள்ளார்கள். பிரபாஸ், கிரித்தி, சைப் அலிகான் ஆகியோரது கதாபாத்திரங்கள் நிஜமாக நடிக்கப்பட்டும், மற்ற கதாபாத்திரங்கள் அனிமேஷன் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து தமிழில் இதற்கு முன்பு வெளிவந்த 'கோச்சடையான்' படம் போல இப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், படக்குழுவினர் 'ஆதி புருஷ்' என்ன வகை தொழில்நுட்பப் படம் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் டீசருக்கு யு டியுபில் அதிகமான பார்வைகள் கிடைத்து வருகிறது.

ஹிந்தி டீசர் 27 மில்லியன் பார்வைகளை 12 மணி நேரத்திற்குள்ளாகப் பெற்றுள்ளது. அதே சமயம் தெலுங்கு டீசர் 2 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. தமிழ் டீசர் 2 மில்லியன், மலையாள டீசர் 4 லட்சம் , கன்னட டீசர் 1 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.

அதே சமயம் டீசரைப் பற்றி நேற்று வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கருத்துக்கள் பல்வேறு விதமாக உள்ளன. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்'விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ... 'பொன்னியின் செல்வன்' : இளம் நந்தினியாக ஆச்சரியப்பட வைத்த சாரா 'பொன்னியின் செல்வன்' : இளம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
03 அக், 2022 - 14:52 Report Abuse
KayD Not that great... Technology ippo very advanced... Quality aa best aa தர Muduym.. But output very below standard. Manasil என்ன நினைச்ச படம் எடுக்கிறாங்க mu தெரியல..பார்க்குற ஆள் முட்டாள்கள் னு ninaipaanga போல. Nalla அரிசி iruku துண்டு துண்டா மட்டன் piece iruku நெய் இருக்கு தேவையான எல்லாம் iruku but Briyani la அரிசி kozhainthu kari வேகமா irundhaa யார் saapida Muduym... Chaa nu iruku வர வர படம் எல்லாம் paakum போது idhukum mela தியேட்டர் போனா sothai கொடு மாதிரி டிக்கெட் ரேட் ஆத்தாடி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in