தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு |
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படம் 'காந்தி டாக்ஸ்'. வசனமில்லாமல் மவுனப் படமாக உருவாகும் இப்படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் பிளாக் காமெடி ஜானரில் வசனங்களற்ற மவுனப்படமாக உருவாக உள்ளது. இது மவுனப் படமாக இருப்பதால், அனைத்து 'மொழி' தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மவுனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தின் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே என்பதால் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் கூறுகையில், ''மவுனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட'' என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் அறிமுக வீடியோ காந்தி பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ளது.