கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகை அஞ்சலி ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அஞ்சலி நடிப்பில் தமிழில் பெரிதாக எந்தவொரு படங்களும் வெளியாகவில்லை. இந்தாண்டு ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஞ்சலி புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவனின் உதவி இயக்குநர் மைக்கேல் என்பவர் இயக்கி வரும் புதிய படத்தில் அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். கடைசியாக 2019ல் 'லிசா' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.